News June 30, 2024

கனிமவளம் குறித்து போராட்டம்: கிருஷ்ணசாமி

image

தென்காசியில் கனிமவள கொள்ளையை நிறுத்திட போராட்டம் நடத்தப்படும் என என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது பேசிய அவர், இத்தொகுதியில் 2லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளேன். 40 தொகுதியில் திமுக வெற்றி பெற்றாலும் மாற்றம் வராது. மேலும், கனிமவளம் குறித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Similar News

News September 11, 2025

செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

image

செங்கோட்டையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை Iபணியாளர்கள் ஆகஸ்ட் மாதம் ஊதியம் இன்று வரை வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு கண்டன போராட்டம் இன்று நடந்தது.
ஏஐசிசிடியூ தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர் சங்க மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, பகவத், ராஜ ஜோதி, குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2025

தென்காசியில் (செப்.19) தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.19 காலை 10 முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஷேர்*

News September 11, 2025

தென்காசி: தெருநாய்கள் கடித்ததில் 3 பேர் படுகாயம்

image

கடையநல்லூரில் தெரு நாய்கள் தாக்கியதில் மூவர் படுகாயம் அடைந்தனர். முதுசாமி (75), முருகன் (47) ஆகியோரை நாய்கள் கடித்து குதறின. இதனால் பைரோஸ் பேகம் (60) என்ற பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பைரோஸ் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

error: Content is protected !!