News December 31, 2025
கனவிலும் நீயே ரித்தி குமார்

ராஜா சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரித்தி குமார், தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற சேலையில், கையில் ரோஜாவுடன் இருக்கும் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரித்தி, வெள்ளை நிறமே, விழியில் பாதி உள்ள நிறமே, கனவிலும் உந்தன் நிறமே என்று பாட வைக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News February 19, 2026
SPORTS 360°: ரஞ்சி டிராபி பைனலில் ஜம்மு – காஷ்மீர்

▶கத்தார் ஓபன் டென்னிஸில் சின்னர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ▶ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக ஜம்மு – காஷ்மீர் முன்னேறியுள்ளது. ▶இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ▶டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்த முறைதான் அதிக சதங்கள்(3) அடிக்கப்பட்டுள்ளன.
News February 19, 2026
வரலாற்றில் இன்று

*1630 – மராட்டியப் பேரரசர் சிவாஜி பிறந்தநாள். *1855 – தமிழ்த் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள். *1878 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது மிக முக்கியமான கண்டுபிடிப்பான கிராமபோனுக்கு காப்புரிமையை பெற்றார். *1986 – இந்தியாவில் முதன்முறையாக கணினி மயமாக்கப்பட்ட ரயில்வே முன்பதிவு டிக்கெட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. *2023 – நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்த நாள்.
News February 19, 2026
ஈரான் மீதான தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விரைவில் போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக ஆக்சியாஸ் ஏஜென்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நடந்தால், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


