News November 23, 2025
கனமழை மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது சில இடங்களில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின்வாரியம் சார்பில் இன்று (நவ 23) விடுத்துள்ள அறிவிப்பில், சாலைகளில் உள்ள மின் மின் வார்த்தைகள் மற்றும் மின் இணைப்பு பற்றி அருகே குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மின்சார குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 7, 2026
நெல்லையில் ரூ. 25 ஆயிரம் வெல்ல வாய்ப்பு

நெல்லை அஞ்சல் கோட்டை துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு : 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறையினர் அஞ்சல் எழுதும் போட்டி நடைபெறுகிறது. டிஜிட்டல் உலகில் மனித தொடர்பின் முக்கியமானது ஏன் என்பது பற்றிய ஒரு நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என்ற கருப்பொருளில் 800 வார்த்தைக்கு மிகாமல் எழுதலாம் முதல் பரிசு தமிழக அளவில் 25 ஆயிரம், 2ம் பரிசு 10,000 வழங்கப்படும். 18ம் தேதி கடைசி நாள்.
News February 7, 2026
நெல்லையில் பறந்த உத்தரவு; 77 காவலர்கள் மாற்றம்!

திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆளினர்கள் 77 காவலர்கள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக வசதிக்காக மாநகரத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பொது பணி மாறுதல் வழங்கி நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் இ.கா.ப உத்தரவிட்டுள்ளார்.
News February 7, 2026
மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.6) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.


