News May 15, 2024
கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் இனிவரும் நாள்களில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். பகல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் , இரவு வெப்பம் 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Similar News
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை(அக்.30) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News October 29, 2025
நாமக்கல்லில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. இந்தநிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்னால் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 29 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 23 முதல், 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் எனவும் அறிவிப்பு!
News October 29, 2025
நாமக்கல்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


