News August 17, 2024
கனமழை: கோவை கலெக்டருக்கு உத்தரவு

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
மருதமலைக்கு இப்படி செல்ல தடை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தாலும், வரும் 23ம் தேதி அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் டூவீலர்கள், கார்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளிலும் சென்று தரிசனம் செய்யலாம் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
வாக்காளர் சேர்ப்பில் எச்சரிக்கை அவசியம்: வானதி சீனிவாசன்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், போலி வாக்காளர்கள் சேர்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புதிய சேர்க்கைகளில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


