News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

Similar News

News December 29, 2025

கிருஷ்ணகிரி: பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது!

image

காவேரிப்பட்டணம் அருகே மேட்டுபள்ளத்தை சேர்ந்த விவசாயி சரசு (65) மற்றும் மாதேசன் (56) ஆகியோருக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று (டிச.28) ஏற்பட்ட தகராறில் சரசுவை மதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

News December 29, 2025

கிருஷ்ணகிரி: அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர்!

image

போச்சம்பள்ளியில், ஆனந்தூர் ஏரியில் மண் கடத்தல் நடப்பதாக வந்த புகாரின் பேரில் கலெக்டர் தினேஷ்குமார் நேற்று (டிச.28) சோதனையில் ஈடுபட்டார். அதிகாரிகள் வருவதை கண்ட அவர்கள் தப்ப முயன்றனர். மேலும் வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம், டிரைவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அதிகாரிகளை மிரட்டிய சுரேஷ் (32) மற்றும் தங்கபாலு (32) ஆகியோரை கைது செய்தனர்.

News December 29, 2025

கிருஷ்ணகிரி மதுபிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் (டிச-29) (திங்கட்கிழமை) அன்று முதல் வாடிக்கையாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்பட்ட காலி பட்டிலின் அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10/-னை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். என கிருஷ்ணகிரி டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!