News January 24, 2026
கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்ட மக்களே உஷார்!

<<18944035>>மஞ்சள் அலர்ட்டை<<>> தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், இரவில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊருல மழை பெய்யுதா நண்பா?
Similar News
News April 9, 2026
ஒரே பாட்டில் அரசியலில் முன்னேற முடியாது: அன்புமணி

அரசியல் என்றால் என்ன என்று விஜய்க்கு அன்புமணி விளக்கம் கொடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் என்பது ஒரே பாடலில் பணக்காரராவது கிடையாது என்றும், அரசியலில் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியல் என்றால் தரையில் நிற்கனும், மக்களை சந்திக்கனும் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
News April 9, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது

Maruti Suzuki நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹45,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News April 9, 2026
இந்த வார OTT விருந்து

இந்த வாரம் கலக்கலான தமிழ் படங்கள் OTT தளங்களில் ஸ்ட்ரீம் ஆகின்றன. *ராதிகாவின் ‘தாய்கிழவி’-ஏப்.10, ஹாட்ஸ்டார் *காதல் ரீசெட் ரிபீட்-ஏப்.10, அமேசான் பிரைம் *’நாங்கள்’-ஏப்.10, சன் நெக்ஸ்ட் *’காக்கி சர்க்கஸ்’ சீரிஸ்-ஏப்.10, ஜீ 5 *ஷேன் நிகாமின் ‘ஹால்’-ஏப்.10, மனோரமா மேக்ஸ் *’கனிமங்கலம் கோவிலாக்கம்’-ஏப்.10, சன் நெக்ஸ்ட். தியேட்டரில் பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’, நட்டி நடராஜின் ‘TN 2026’ ரிலீசாகின்றன.


