News May 23, 2024
கனமழையில் மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்தது

குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு புலிக் கூட்டுவிளையைச் சேர்ந்த மூதாட்டி எஸ்தர் (71). இவருடன் குஞ்ஞாலி என்ற மூதாட்டியும் வசித்து வந்தார். இன்று பெய்த கனமழையில் எஸ்தரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த இடத்தில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இடிந்த வீட்டை சரி செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்தர் கோரிக்கை விடுத்தார்.
Similar News
News November 5, 2025
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து 2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.


