News November 6, 2024
கந்த சஷ்டியை முன்னிட்டு விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்கள்

கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30க்கு புறப்படும் ரயில், விழுப்புரம், திருச்சி மதுரை, விருதுநகர் வழியாக நாளை காலை 8.30க்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, அதேநாள் இரவு 10.15க்கு திருச்செந்தூரில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக பயணித்து, 8ஆம் தேதி காலை 10.30க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
Similar News
News August 17, 2025
விழுப்புரம் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <
News August 17, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.