News March 31, 2025

கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரா என்பவர் நேற்று (மார்.30) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600 பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வீராவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரா மீது ஒரு கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News April 2, 2025

காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம்

image

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணையதளத்தை பயன்படுத்தி இன்றுமுதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News April 2, 2025

குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார்.இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!