News June 16, 2024
கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது

ஆம்பூரை சேர்ந்தவர் பராஸ் அகமத் (29). இவர் கடந்த 7ஆம் தேதி வேலூர் ஆற்காடு சாலையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் பராஸ் அகமதிடம் கத்தியை காட்டி மிரட்டி 30 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சரத், தினேஷ், பிரசாந்த், கோகுல் ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர்.
Similar News
News March 3, 2026
வேலூரில் 207 போலீசாருக்கு ப்ரோமோஷன்!

காவல்துறையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு பதவிக்காலம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2013-ல் பணியில் சேர்ந்த 169 பேர் முதல் நிலை காவலரில் இருந்து தலைமைக் காவலராகவும், 2016-ல் சேர்ந்த 38 பேர் 2-ம் நிலை காவலரில் இருந்து முதல் நிலை காவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 207 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 3, 2026
அணைக்கட்டில் பாமக முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு (மேற்கு) ஒன்றியம் நேமந்தபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச்.2) வாக்குச்சாவடி திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 3, 2026
வேலூர்: மனஉளைச்சலில் விவசாயி எடுத்த முடிவு!

வேலூர்: ஊசூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


