News March 25, 2025
கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோர சம்பவம்!

இராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 70 வயது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 14, 2025
ராணிப்பேட்டை: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <
News December 14, 2025
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

ராணிப்பேட்டை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News December 14, 2025
ராணிப்பேட்டை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


