News August 6, 2025
கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஆடி மாத ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News April 7, 2026
BREAKING சாத்தூர்: நயினார் நாகேந்திரன் வேட்பு மனு ஏற்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
விருதுநகர்: சிலிண்டருக்கு அதிக காசு கேட்டால்.. இத பண்ணுங்க

விருதுநகர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News April 7, 2026
ராஜபாளையம்: கோவிலில் நகை திருட்டு; CCTV யில் சிக்கிய திருடன்

ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்த்தியடைந்த பூசாரி CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பக்தர் கருவறையை திறந்து திருடிய காட்சி பதிவாகியிலிருந்தது. இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


