News September 9, 2025
கண்ணாடி பாலத்தில் கண்ணாடியில் விரிசல் எப்படி?

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சுத்தியல் ஒன்று கண்ணாடியில் விழுந்ததில் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சுத்தியல் விழுந்து உடையும் அளவில் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Similar News
News September 9, 2025
குமரி: சிறுவன் அடித்துக் கொலை; தீவிர தேடுதல்

குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வி மகான் அபிநவ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் தாயார் செல்வி மாயமான நிலையில் அவருடன் வாழ்ந்து வந்த செல்வ மதன் என்பவர் சிறுவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள நிலையில் அதனை வாங்க கடந்த 7 நாட்களாக யாரும் முன் வரவில்லை.
News September 9, 2025
குமரி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT
News September 9, 2025
குழித்துறையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செப்.11 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, கிள்ளியூர், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.