News January 5, 2026

கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*உலகில் வேர் இல்லாமலும், நீர் இல்லாமலும் வளரும் ஒரே செடி ஆசைதான். *தேவைக்காக கடன் வாங்கு, கிடைக்குதே என்பதற்காக கடன் வாங்காதே. *தேவைக்கு மேல் பொருளும், திறமைக்கு மேல் புகழும் கிடைத்துவிட்டால் கண்ணில் தென்படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும். *அடைவதற்கு ஆசைப்படுபவன் இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். *கேட்கும் போது சிரிப்பு வரவேண்டும், சிந்திக்கும் போது அழுகை வரவேண்டும் அதுதான் நல்ல நகைச்சுவை.

Similar News

News January 28, 2026

துணை முதல்வர் அஜித் பவார் காலமானார்.. கடைசி போட்டோ

image

மகாராஷ்டிரா DCM அஜித் பவார் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விமானம் புறப்படும் முன்பாக அஜித் பவார், தனது பாதுகாப்பு அதிகாரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று SM-ல் வைரலாகிறது. ஆனால், இந்த போட்டோவின் உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை. முன்னதாக, கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 28, 2026

விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: சரத்குமார்

image

உங்களை போல கட்சியை கலைக்கும் நிலை விஜய்க்கும் ஏற்படுமா என கேட்கப்பட்டதற்கு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு தான் 17 ஆண்டுகள் கட்சியை நடத்தியதாகவும், விஜய்யுடன் தன்னை ஒப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் கட்சியை கலைக்கவில்லை என கூறிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் விவரித்தார்.

News January 28, 2026

தங்கம், வெள்ளி.. விலை ₹35,000 மாறியது

image

<<18982860>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹35,000 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹400-க்கும், 1 கிலோ ₹4 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026 ஜன.1-ல் வெள்ளி 1 கிலோ ₹2.56 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!