News April 28, 2025
கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
Similar News
News September 17, 2025
கடலூர்: ரூ.96 லட்சம் மோசடி செய்த பெண் கைது

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன் (39). இவரை நிதி நிறுவன இயக்குனர் ஆக்குவதாக கூறி முதலியார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி ஐஸ்வர்யா, அவரது தாய் முனியம்மாள் என்கிற ஜீவா ஆகியோர் கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து ரூ.96 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து முனியம்மாளை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
News September 17, 2025
கடலூர்: மின் தடையா? சிறப்பு எண் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையின் போது மின் விபத்துகள் ஏற்படாத வகையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் பொதுமக்கள் மின் நிறுத்தம் மற்றும் மின் விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் 94987 94987 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். இது தவிர 94458 55768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.16) இரவு 10 மணி முதல் இன்று (செப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.