News April 13, 2024

கண்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

image

எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்சல், ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை பாரத் நகரில் இருந்து சுனாமி குடியிருப்பு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எர்ணாவூர் மேம்பாலம் அருகே வந்தபோது அவரது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

பூந்தமல்லி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News August 25, 2025

பூந்தமல்லி: நீங்களே முதல்வரிடம் புகார் செய்யலாம்

image

திருவள்ளூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம். இங்கே <>க்ளிக்<<>> செய்து புகார்களை பதிவு செய்யலாம் அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்). <<17509831>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

பூந்தமல்லி: குறைகளை சொல்ல ஸ்கேன் பண்ணுங்க

image

திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க QR கோடு அறிமுகம் செய்துள்ளார். இதை ஸ்கேன் செய்தால், ‘நம்ம ஊரில்; நம்ம எம்.பி.,’ என்ற பக்கத்திற்கு செல்கிறது. அங்கு மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல தற்போது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் வருகின்றனர்.

error: Content is protected !!