News December 19, 2025

கண்காணிப்பு வலையத்துக்குள் பந்தலூர்!

image

பந்தலூர் புஞ்சை வயல் கிராமத்தில் வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனவர் ஆனந்த், வனக்குழுவினர், இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன், ‘பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல வேண்டாம், பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெற்றோர் துணையுடன் செல்ல வேண்டும்,’என, அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் வனக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

நீலகிரி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

நீலகிரியில் தீவிர தேடுதல் வேட்டை

image

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மசினகுடி பகுதியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா, நக்சல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

News December 20, 2025

நீலகிரியில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,33,076 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,54,759 பெண் வாக்காளர்கள் 2,78,299 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!