News July 26, 2024
கண்காட்சி, கருத்தரங்கம், மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் – 2023-24–ன்கீழ் உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் (ஜூலை26) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, உதவி மண்டல மேலாளர் முத்தையா அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
Similar News
News March 7, 2026
செங்கல்பட்டு ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

செங்கல்பட்டு மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967(அ)1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!
News March 7, 2026
செங்கல்பட்டு: இன்று என்ன பேச போகிறார் விஜய்?

செங்கல்பட்டு: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று நடைபெறும் மகளிர் தினவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். தனியார் நச்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில், மகளிர் மத்தியில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News March 7, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று தனது பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.


