News November 19, 2025

கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

image

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.

Similar News

News April 5, 2026

தேர்தலுக்கு பின் எச்.ராஜா கவர்னர்?

image

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா அரசியலுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக புதுச்சேரி வந்த மோடி, நேற்று முன்தினம் எச்.ராஜாவை நேரில் அழைத்து நலம் விசாரித்துள்ளார். அப்போது, ‘தேர்தல் முடிந்ததும், உங்களுக்கு நல்ல செய்தி வரும்’ என மோடி கூறியதால் எச்.ராஜா மகிழ்ச்சி அடைந்துள்ளாராம். இதனால், தேர்தலுக்கு பின் அவர் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News April 5, 2026

கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த சீமான்

image

‘LIK’ படத்தில் பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இந்நிலையில், சீமான் பற்றி கீர்த்தி ஷெட்டி கூறிய விஷயம் வைரலாகிறது. அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சீமான் தூய தமிழில் பேசுவார். ஆங்கில வார்த்தைகளுக்கு அழகான தமிழ் சொற்களை கூறுவார் என தெரிவித்துள்ளார். அவருடன் இருந்தது நல்ல அணுபவம், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் கீர்த்தி கூறியுள்ளார்.

News April 5, 2026

விசிகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: திருமா

image

புதுச்சேரியின் ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் தொகுதி விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமா தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை கேட்டுக் கொண்டதன்பேரில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம் என்று திருமா கூறியுள்ளார். அதேநேரம், உழவர்கரை தொகுதியில் விசிகவே போட்டியிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். நான் போட்டியிடவில்லை என நேற்று திருமா அறிவித்திருந்தார்.

error: Content is protected !!