News March 28, 2024

கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டி

image

மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார். ஆனால் இதுபோல ஒரு முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

Similar News

News March 7, 2026

பொதுமக்களை ஈரான் தாக்குகிறது: USA

image

USA, ஈஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், 12-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் பொதுமக்களை ஈரான் திட்டமிட்டே தாக்குவதாக USA குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானின் பயங்கரவாத படைகள் செய்யும் அட்டூழியத்தை ஏற்க முடியாது என்றும், இந்த தாக்குதல்களுக்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்வார்கள் எனவும் USA கூறியுள்ளது.

News March 7, 2026

SPORTS 360°: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அபாரம்

image

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

News March 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

error: Content is protected !!