News March 28, 2024

கணேசமூர்த்தி உடலுக்கு கனிமொழி அஞ்சலி

image

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News November 2, 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் அதிரடி கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது‌. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமார் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

News November 1, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News November 1, 2025

திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!