News April 22, 2025
கணவர் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

ராசிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 66) இவரது மனைவி பூங்கோதை (62). இருவரும் நேற்று டூவீலரில் மல்லசமுத்திரம் அருகே மொரங்கம் காட்டூர் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டெம்போ மோதியது. இதில் பூங்கோதை (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ராமச்சந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 11) இதன் விலை ரூ.4.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
நாமக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு SI கைது!

நாமக்கல், கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாரளாக மோகன் (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News August 12, 2025
நாமக்கல்லில் ஆக.14-ல் வேலைவாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04286 222260 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE செய்து உதவுங்க!