News February 28, 2025
கணவர் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

விஜயநாராயணம் அருகே உள்ள ஆண்டார் குளத்தை சேர்ந்த மாரியப்பன் (19)என்பவர் கடந்த 2022 -ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் மாரியப்பன் உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News August 24, 2025
உழவர் சந்தை அங்காடி ஏலம் அறிவிப்பு

மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் உள்ள சிறப்பு அங்காடிகளை இயக்குவதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் 03.09.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு விடப்பட உள்ளது . திருநெல்வேலி விற்பனைக் குழு அலுவலகத்தில் அதே நாள் பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு தலைமையில் நடைபெறும்.
News August 24, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 24, 2025
நெல்லைக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மைசூரு – நெல்லை இடையே ஆக.26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து ஆக.26 இரவு 8:15 மணிக்குப் புறப்படும் ரயில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஆக. 27 காலை 10:50 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து ஆக.27 பிற்பகல் 3:40 மணிக்குப் புறப்படும் ரயில், ஆக. 28 காலை 5:50 மணிக்கு மைசூரை சென்றடையும். *ஷேர்