News August 23, 2024
கணவன் மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஆண்டு தாசில்தாராக பணியாற்றிய தென்னரசு பட்டா மாறுதல் செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைதானார். அவரின் வீட்டில் சோதனையிட்டபோது கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். அவரும், மனைவி சித்த மருத்துவர் சாந்தியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதன்படி நேற்று ராம்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News December 11, 2025
ராமநாதபுரம்: வாக்காளர்களே இன்றே கடைசி.. செக் பண்ணுங்க

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <
News December 11, 2025
இராமநாதபுரத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை

இராமநாதபுரம், இன்று (டிச.11) ஆர்.கே நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர், தில்லை நாயகிபுரம், பழங்குளம், காவனூர் துணை மின் நிலையம், ஆனந்தூர் உப மின்நிலையம், திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகள், தேவிப்பட்டினம், கழனிக்குடி, சித்தார் கோட்டை, பெருவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம் & திருப்பாலைக்குடி துணை மின்நிலையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
News December 11, 2025
இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி

இராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடந்தும் இலவச போட்டோ பிரேம், லேமினேசன் & ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற டிச- 19-ம் தேதி முதல் 29ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், தகவலுக்கு 9087260074,8056771986 என்ற எண்களை தொடர்புக் கொள்ளவும். *SHARE


