News July 26, 2024
கணவன் மனைவி பரிதாப பலி

விருதுநகர் மாவட்டம் சேவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் – லட்சுமி தம்பதியினர். நேற்று, இருவரும் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருவேற்காடு சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரவாயல் பறக்கும் பாலத்திற்காக சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த கனரக கண்டைனர் லாரி இவர்கள் மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
Similar News
News March 4, 2026
குஜராத் வரை சென்று அதிரடி காட்டிய சென்னை போலீஸ்!

சென்னை பூக்கடை ரெட்டி ராம் தெருவில் ஜன.25 ஆம் தேதி கடை ஷட்டர் பூட்டை உடைத்து, ரமேஷ்குமார் ஜெயின் (55) கடையில் ₹1,30,000 மற்றும் எதிர்கடையில் ₹65,000 திருடப்பட்டதாக C-1 பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதுங்கியிருந்த ஈஸ்வர் (42), கன்பத் சிங் (38) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
News March 4, 2026
விரைவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை!

சென்னை பிரிவில் புதிதாக கட்டப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைகளை தில்லி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கார்க் மார்ச் 5ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே நாள் மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெறும். மேலும், மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: NGT உத்தரவை எதிர்த்து வழக்கு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


