News December 24, 2025

கணவனை போட்டுத்தள்ளி நாடகமாடிய மனைவி

image

உ.பி.,யில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை <<18656167>>கிரைண்டரில்<<>> போட்டு கொன்ற சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஹைதராபாத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ப்ளேஸ்கூல் நடத்தி வந்த பூர்ணிமா (36), கட்டிடத் தொழிலாளியான காதலன் மகேஷின் உதவியோடு, கணவர் அசோக்கை (45) கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். கொன்றதோடு, மாரடைப்பால் கணவன் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவந்துள்ளது.

Similar News

News December 26, 2025

56 பந்துகளில் சதம் அடித்து மிரட்டிய ரிங்கு சிங்

image

விஜய் ஹசாரே தொடரில் கேப்டன் ரிங்கு சிங்கின் மரண அடியால் உ.பி. அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தியுள்ளது. 5-வது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் 60 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து சண்டிகர் பவுலர்களை திக்குமுக்காட வைத்தார். இதனையடுத்து 367 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News December 26, 2025

‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதா?

image

‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதாக உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையமாக கொண்டு தான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதையை திருடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News December 26, 2025

Expiry vs Best Before: இவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா?

image

Expiry Date-க்கும், Best Before-க்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. Expiry Date என்றால் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு ஒரு உணவு பொருளை சாப்பிடக்கூடாது என அர்த்தம். அப்படி செய்தால் அதில் வளர்ந்திருக்கும் பூஞ்சைகளால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஆனால் Best Before என்றால், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு அந்த பொருளின் சுவையோ, நிறமோ, தரமோ குறையலாம் என அர்த்தம். 99% பேருக்கு தெரியாது, SHARE THIS.

error: Content is protected !!