News March 8, 2025
கணவனை தாக்கிய கள்ளக்காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு

பெரணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் பாண்டியன் – செல்வி. இவருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர்.பாண்டியன் தேவிகாபுரத்தை சேர்ந்த சக்திவேல் கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.பாண்டியன் மனைவிக்கும் சக்திவேலுக்கும் தகாத உறவு ஏற்பட்டு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளார்.இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன்,சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு.
Similar News
News September 10, 2025
தி.மலை: மாணவி சடலமாக மீட்பு

கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (15) இவா் பிளஸ் 1 படித்து வந்தாா். வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் (செப்.06) காணாமல் போன நிலையில், கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக நேற்று மீட்கபட்டார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
தி.மலை: அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
தி.மலை:குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) தலைமையில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.