News February 24, 2026

கணவனை காதலிக்கு விற்பனை செய்த மனைவி

image

MP-ன் போபாலில் கணவனை, மனைவி ஒருவர் ₹1.5 கோடிக்கு அவரது காதலிக்கு விற்பனை செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அரசு அதிகாரியான 52 வயது பெண், சக ஊழியரான 42 வயது நபரை காதலித்துள்ளார். இவ்விவகாரம் கோர்ட் வரை செல்லவே, விசாரணைக்கு பிறகு குடும்ப நலன் கருதி பணத்தை பெற்றுக் கொண்டு 23 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை விட்டு கொடுத்துள்ளார். சினிமாவை விஞ்சிய இச்சம்பவம் SM-ல் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?

Similar News

News February 25, 2026

தேர்தலில் தோற்றும் மக்கள் மனங்களை வென்றவர்!

image

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையிலிருந்த <<19233255>>நல்லகண்ணு<<>> ஒருமுறை மட்டுமே தேர்தலில் களமிறங்கினார். 1999-ல் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 3,75,991 வாக்குகள் பெற்றார். அத்தேர்தலில் 4,30,068 வாக்குகள் பெற்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நல்லகண்ணுவை எதிர்த்துப் போட்டியிட்டதற்காக பின்னொரு காலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக மனம் வருந்தினார்.

News February 25, 2026

அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு

image

தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி, 2026 தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அதன் தலைவர் ஷேக் தாவூத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதி திமுக ஏமாற்றி வருவதாகவும், மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டில் இம்முடிவை எடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார். இது சிறுபான்மை வாக்குகளை பெற வியூகம் வகுத்துவந்த MK ஸ்டாலின், விஜய் தரப்புக்கு சற்று அதிர்ச்சி கொடுத்துள்ளதாம்.

News February 25, 2026

நல்லகண்ணுவின் ஆசை நிறைவேறியது

image

மறைந்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக தானமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் விருப்பப்படியே இது நடப்பதாகவும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் அளிக்கப்படுவதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த பணம், பரிசுத் தொகையை கட்சிக்கும், TN மக்களின் நலனுக்கும் வழங்கிய நல்லகண்ணு, தற்போது தன் உடலையே விட்டுச் சென்றுள்ளார்.

error: Content is protected !!