News April 22, 2025
கட்டுரை, பேச்சு போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் செம்மொழிநாள் விழாவினை முன்னிட்டு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு 09.05.2025 அன்றும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 10.05.2025 அன்றும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 22, 2025
சிவகங்கை: SI தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) பொதுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.04.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. மேலும், இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-240435 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 22, 2025
ஜேசிபி ஓட்டுநர்களுக்கு ஓர் நற்செய்தி!

சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ், ஜே.சி.பி இயந்திரங்களை இயக்குவதற்கு தகுதியுடைய திறன் பெற்ற விருப்பமுள்ள ஓட்டுநர்கள், சிவகங்கை மற்றும் காரைக்குடியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவகத்தினை 9080230845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
News April 22, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.04.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்