News July 24, 2024

கட்சி நிர்வாகிகளுக்கு விருந்தளித்த அமைச்சர்

image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்தளித்தார். இதில், அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டு அறுசுவை உணவை ருசித்து சாப்பிட்டனர்.

Similar News

News March 6, 2026

FLASH: சென்னையில் குடிநீர் வராது!

image

போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணியின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் கசிவு சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால், மார்ச்.7, 8ம் தேதிகளில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். நீரை சேமித்து வையுங்கள் மக்களே. அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

சென்னை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

சென்னை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

அறிவித்தார் சென்னை ஆட்சியர்

image

வில்லிவாக்கத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வண்ண மீன், மற்றும் உபகரணங்கள் விற்பனையும் நடந்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள கூட்டரங்கில், வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாத்தல், நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி, நாளை (மார்ச்.7) காலை 10முதல் மதியம் 3வரை நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!