News March 21, 2026

கட்சியில் இருந்து விலகுகிறார்.. அடுத்த பரபரப்பு

image

ராமதாஸ் – சசிகலா இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவு ராமதாஸ் தரப்பு பாமக MLA அருள் அதிருப்தியில் உள்ளாராம். இதனாலேயே நேற்றைய கூட்டணி அறிவிப்பின்போதும் அங்கு அருள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ராமதாஸ் தரப்பிலிருந்து விலக அருள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 2, 2026

பண கஷ்டம் தீர பெளர்ணமியில் இத பண்ணுங்க!

image

பௌர்ணமியன்று அம்பாளை வழிபடுவது பண கஷ்டத்தை தீர்க்கும் என நம்பப்படுகிறது. பெளர்ணமி நேரத்தில் மல்லி பூ, சிவப்பு நிற அரளிப்பூ, செம்பருத்தி பூ, தாமரை பூ இவற்றில் ஏதாவது ஒன்றை அம்பாளுக்கு சமர்ப்பித்து, அதனுடன் ஒரு இனிப்பு பலகாரத்தையும் அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். மேலும், லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி மனமுருகி வேண்டுங்கள். பிரசாதத்தை 4 பேருக்கு கொடுத்தால், கர்ம வினைகள் குறைந்து, பணக்கஷ்டம் நீங்குமாம்.

News April 2, 2026

அசாம் தேர்தல்: ஊடுருவல்காரர்கள் Vs திருடர்கள்

image

PM மோடி, பிரியங்கா காந்தியின் பிரசாரங்களால் அசாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அசாமின் புனித தலங்களை ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்துவிட்டதாகவும், வாக்கு வங்கிக்காக அவர்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற காங்., முயற்சிப்பதாகவும் மோடி சாடினார். மறுபுறம், மொத்த அசாமையும் திருடிய ஒரு குடும்பம், அம்மாநில சொத்துகளை பெரும் முதலாளிகளுக்கு விற்றுவிட்டனர் என்றும் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

News April 2, 2026

விஜய் பிரசாரம்.. வந்தது முக்கிய அறிவிப்பு

image

விஜய் இன்று திருச்சியில் மரக்கடை MGR சிலை அருகே மதிய நேரத்தில் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என தவெக கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக SM & தொலைக்காட்சி நேரலைகளில் பிரசாரத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பிரசார வாகனத்தை பின்தொடர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!