News March 1, 2026
கடையம் அருகே மளிகை கடை வியாபாரி தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (65). மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 2, 2026
தென்காசி: நகை திருடிய வழக்கில் 4 பேர் கைது

ஆலங்குளத்தை சேர்ந்த சக்திவேல் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது பீரோவில் இருந்த 110 கிராம் நகை திருடு போனது. இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் இவரது கடைக்கு எதிரே பைக் பழுது கடை வைத்திருக்கும் தினேஷ், மணிகண்டன் உட்பட 4 பேர் நகை திருடியது தெரிந்தது. நேற்று 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News March 2, 2026
தென்காசி: சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம்-ஆனைகுளம் செல்லும் சாலையில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரம் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News March 2, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர காவல் ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்யபட்டு வருகிறது. அதன்படி இன்று மார்ச 01.3.2026 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


