News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 7, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

இன்று (செப்டம்பர் 7) காலை 7 மணி நிலவரப்படி கடனா அணை நீர் இருப்பு 57 அடியாக உள்ளது. அணைக்கு 52 கான அடி நீர் வருகிறது. 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 62 அடி, கருப்பாநதி அணை நீர் இருப்பு 54 அடி, குண்டாறு அணை நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 21 அடி, அடவி நைனார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.
News September 7, 2025
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.64,480 சம்பளம்! நாளை கடைசி!

தென்காசி மக்களே, ரெப்கோ வங்கியில் (Repco Bank) உள்ளூர் சேவை அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 21 வயது நிரம்பிய டிகிரி முடித்தவர்கள் <
News September 7, 2025
தென்காசி: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

தென்காசி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<