News March 16, 2025

கடையநல்லூர்: திருமணம் தாண்டிய உறவால் கொலை!

image

தென்காசி, கடையநல்லூர் சவல் விலை 3வது தெருவை சேர்ந்த முருகன்(35) என்பவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, முருகன் மனைவி செல்வி யாருடனோ அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் கண்டித்தும் திருமணம் தாண்டிய உறவை மறுத்ததால் முருகன் கொலை செய்ததாக நேற்று(மார்ச் 15) வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

தென்காசி: செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி

image

நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள்(80) என்பவர் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகார் வந்த நிலையில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவர்ணம்(34) என்ற நபரை கைது செய்தனர். இவர் ME(C.S) படித்தவர் ஆவார்.

News September 13, 2025

தென்காசி: உங்க PHONE-ல இது இருக்கா??

image

தென்காசி மக்களே செல்போன்களில் நம் சொந்தங்கள் எண்கள் எவ்வளவு முக்கியமோ? அதே போன்று அவசர தேவைக்கான எண்களும் அவ்வளவு முக்கியமே!
✅தென்காசி காவல் நிலையம் – 04633222278
✅தென்காசி பெண்கள் காவல் நிலையம் – 04633222238
✅அரசு மருத்துவமனை – 04633280164
✅தீயணைப்பு நிலையம் – 04633222166
✅மின் நிலையம் – 04633222268
இதன் தொடர்ச்சி வேணுமா COMMENT + SHARE பண்ணுங்க..

News September 13, 2025

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டதைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் டாக்டர்.அம்பேத்கர்
தமிழ்நாடு அரசு விருது பெறுவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின சமுதாய மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையினை உயர்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!