News September 26, 2024
கடையநல்லூரில் பாரம்பரிய உணவு திருவிழா
கடையநல்லூரில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் பங்கேற்ற சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கடையநல்லூர் யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Similar News
News November 20, 2024
மாநில காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு
தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு, இன்று மாலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தென்காசிக்கு வருகை தந்தார். அவரை தென்காசி வாய்கால் பாலம் இசக்கி மஹால் முன்பு தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். நிகழ்வில், நகராட்சி கவுன்சிலர் ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
வனவிலங்கு கண்காணிப்பு குழுவில் தென்காசியைச் சேர்ந்தவர்கள்
தமிழக அரசு நெல்லை வனவிலங்கு சரணாலயம் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைவராகவும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் சிவகிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த தாசில்தார்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர் ராஜாராம், பராசக்தி கல்லூரி பேராசிரியர் செல்வி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 20, 2024
செங்கோட்டை அருகே இலவச பயிற்சிக்கு அழைப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.