News January 17, 2026

கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

image

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

3 மாநில தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

image

பிற்பகல் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 62.71% மற்றும் அசாமில் 75.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. வெயில் சுட்டெரித்த போதும், வாக்குச்சாவடிகளில் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அசாமில் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், புதுச்சேரி, கேரளாவில் 6 மணியுடன் நிறைவடைகிறது.

News April 9, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000.. காங்கிரஸ் வாக்குறுதி

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம், காலியான 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கொடுத்துள்ளது.

News April 9, 2026

பாகிஸ்தானை நாங்கள் நம்பவில்லை: இஸ்ரேல்

image

அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை ஒரு நம்பகமான தரப்பாக கருதவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ரூவன் அசார், ஹமாஸுடனான உடன்பாட்டை எட்ட கடந்த காலங்களில் அமெரிக்கா எப்படி கத்தார், துருக்கியை பயன்படுத்தியதோ, அதேபோன்று தற்போது பாகிஸ்தானை மத்தியஸ்தத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!