News April 7, 2026

கடும் போராட்டத்திற்கு பின் வேட்புமனு ஏற்பு

image

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அவரின் 2 மனுக்களையும் ஒரே நபர் முன்மொழிந்ததாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, தேர்தல் பெற்றதாக பிரமாணப் பத்திரத்தில் குறப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, மனுவை ஏற்பதாக அறிவித்தார்.

Similar News

News April 11, 2026

170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

image

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News April 11, 2026

விஜய்க்கு ஆதரவாக நானா? பார்த்திபன் மறுப்பு

image

விஜய் தான் அடுத்த CM என பார்த்திபன் கூறியதாக செய்தி பரவியது. இந்நிலையில், இதுபோன்ற கருத்தை தான் தெரிவிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட நபரிடம், தான் பேசியதற்கான proof உங்களிடம் உள்ளதா என கேட்டேன். அந்த நபரிடம் proof இல்லததால், போஸ்ட்டை உடனே remove செய்துவிட்டார் எனக்கூறிய பார்த்திபன், இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன் யோசித்து செயல்படவும் வலியுறுத்தினார்.

News April 11, 2026

விஜய் பரப்புரையில் விபத்துகள்: ஸ்டாலின் பதில்

image

புதிதாக எத்தனை பேர் வந்தாலும் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் கூறியுள்ளார். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து கேட்டதற்கு, நாட்டு மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; விரைவில் அவர்கள் திருந்துவார்கள் என்றார். மேலும், தற்போதைய சூழலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்ற நிலை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!