News November 6, 2025
கடவூர் அருகே விபத்து

கடவூர் தாலுகா வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(40). இவர் பஞ்சப்பட்டி சாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்ற போது அவ்வழியே பூபதி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் குமார் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
கரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 6, 2025
கரூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News November 6, 2025
கரூர்: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


