News December 26, 2025

கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News January 2, 2026

கரூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 2, 2026

கரூர்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

image

கரூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

குளித்தலை: திமுக முக்கிய பிரமுகர் உயிரிழப்பு

image

குளித்தலை நகர திமுக 5-வது வட்ட செயலாளர் மற்றும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினர் செல்வம் இன்று உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். அவரது இறப்பிற்கு குளித்தலை எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர், குளித்தலை நகர திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் உழவர் சந்தை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!