News December 26, 2025

கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News December 30, 2025

கரூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

மண்மங்கலம் அருகே விபத்து

image

மண்மங்கலம் சின்னகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவர் தனது ஸ்கூட்டியில் உறவினர் பசுவாயி என்பவரை அமர வைத்துக் கொண்டு நேற்று சின்னகாளிபாளையம் சாலையில் சென்றபோது எதிரே சிவப்பிரகாஷ் ஒட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

News December 30, 2025

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாரில் மது விற்பனை சோதனை செய்துள்ளனர். இதில் மது விற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த பிரகாஷ் (30) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சத்யராஜ் (36)ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!