News May 17, 2024

கடலோர காவல்படை வீரர்கள் சார்பில் டென்னிஸ் போட்டி

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை சார்பில் காரைக்கால் காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் கடலோர காவல் படை வீரர்களுக்கு இடையே டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கடலோர காவல் படை அமயா ரோந்து கப்பல் சேர்ந்த ஐந்து அணிகளாக பிரிந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் உஜயா பிரதீக் கப்பல் அணியினர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

Similar News

News April 21, 2025

புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <>வலைத்தளத்தில்<<>> இந்த பணிக்கு விண்ணப்பிக்களாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News April 21, 2025

பூசாரி கொலை – கொத்தனார் கைது!

image

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்த‌தாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!