News September 20, 2025
கடலூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

கடலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 20, 2025
சிதம்பரம்: லாட்டரி வியாபாரி குண்டாஸில் கைது

சிதம்பரம் கே.கே.சி.நகரை சேர்ந்தவர் ஷம்முபாய் என்ற நசீர் (56). இவர் மீது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 4 லாட்டரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவரது குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி, லாட்டரி வியாபாரியான ஷம்முபாய் நேற்று குண்டாஸில் கைது செய்யப்பட்டார்.
News September 20, 2025
கடலூர்: ரூ.75,000 கையாடல்; இன்ஸ்பெக்டர் மாற்றம்

ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரன் (39) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் பிருந்தா கணக்கு காட்டாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
News September 20, 2025
கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<