News January 3, 2026
கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
Similar News
News January 20, 2026
கடலூர்: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பாடலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான பாடலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 20, 2026
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 20, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


