News January 27, 2026

கடலூர்: 51 கம்பெனிகள் மீது நடவடிக்கை

image

கடலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் நிறுவனங்கள் ஏதேனும் செயல்படுகிறதா என தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் விதிமுறைகளை மீறி இயங்கிய 51 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

கடலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் வரும் பிப்.1-ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டாலோ, மதுபான கூடங்கள் செயல்பாட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கடலூர் மாவட்டம் ரெட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணன் (60). இவர் நேற்று கீழ்ஒரத்தூரிலுள்ள சுரேஷ் என்பவர் வயலுக்கு கூலி வேலைக்கு சென்றார். அப்போது கிருஷ்ணன், வயலுக்கு அருகேயுள்ள சோலார் மின் கம்பிவேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 29, 2026

கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.28) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29 க) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!