News October 17, 2025

கடலூர்: 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான்

image

வேப்பூர் அருகே கழுதூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கியது, மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 18, 2025

கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.18) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மின்னல் தாக்கும் நேரங்களில் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது. SHARE NOW!

News October 18, 2025

கடலூர்: போதையில் போலீஸ் மீது தாக்குதல்

image

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிபோதையில் இருந்த இரண்டு பேர், ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மாணிக்கம் (57), குபேர் (40) ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 18, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!