News July 8, 2025

கடலூர்: வேலை வேண்டுமா? இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நகராமலை கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்த, சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படும் அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ தினத்தில் பிரார்த்தனை செய்தால் தங்களது மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News July 8, 2025

கடலூர் விபத்து: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த திராவிடமணி என்பவரது மகள் சாருமதி மற்றும் அவரது மகன் செழியன் ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.

News July 8, 2025

கடலூர்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து – தெற்கு ரயில்வே

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் 3 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூர் – கடலூர் போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சத்திரம் வரையும், தாம்பரம் – திருச்சி ரயில் சிதம்பரம் வரையும், திருவாரூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 8, 2025

ரயில் தடங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் – ரயில்வே பொதுமேலாளர்

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்டர் லாக்கிங் இல்லாததால் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் தடங்களிலும் இன்டர் லாக்கிங் சிஸ்டம் பொறுத்தப்படும் என விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!