News December 31, 2025

கடலூர்: வேகமாக வந்த பைக் மோதி மூதாட்டி பலி

image

கடலூர் மாவட்டம், வரக்கால்பட்டையை சேர்ந்தவர் கேசம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில், கேசம்மாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

கடலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கடலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

கடலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!