News October 25, 2025

கடலூர்: வெள்ளப்பெருக்கில் சிக்கி முதியவர் பரிதாப பலி

image

கடலூர் அருகே பெத்தாங்குப்பம் மேட்டு தெருவில் வசித்து வந்த மணிவேல் (60) என்பவர் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் தேடிய நிலையில் இன்று (அக்.25) காலை பரவனாற்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Similar News

News February 4, 2026

கடலூர்: 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் பருவமான நடப்பு கரீப்- 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகள் நெல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News February 4, 2026

கடலூர்: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!