News October 20, 2025

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 20, 2025

அமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

image

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (அக்டோபர் 20) தனது சமூக வலைதள பக்கத்தில், ‘தித்திக்கும் தீபஒளி திருநாளை மகிழ்ச்சியோடும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

News October 20, 2025

கடலூர்: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

image

கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்
1 .கடலூர்- 04142-295101
2. சேத்தியாத்தோப்பு- 04144-244366
3. சிதம்பரம்-04144-238099
4. காட்டுமன்னார்கோவில்- 04144-262101
5. குறிஞ்சிப்பாடி- 04142-258370
6. பண்ருட்டி-04142-242100
7. திட்டக்குடி- 04143-255208
8. ஸ்ரீமுஷ்ணம்- 04144-245201
9. வேப்பூர்- 04143-241229
10. விருத்தாசலம்- 04143-238701
11. கடலூர் SIPCOT-04142-239242
12. நெல்லிக்குப்பம்- 04142-272399

News October 20, 2025

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து நெய்வேலி கொல்லிருப்பு நோக்கி சென்ற வேன் ஒன்று நெய்வேலி சாம்பல் ஏரி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் லேசான காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!